இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்! ஜெயலலிதா

E-mail அச்செடுக்க

மதுரை: அதிமுக ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் மதுரையில் நடத்த முடிவு செய்ததை தொடர்ந்து அதிமுகவிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தாலும், திட்டமிட்டவாறு பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக அதிமுக முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் அ.மில்லர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கொடநாடு எஸ்டேட்டிலிருந்து கார் மூலம் கூடலூர் செல்லும் வழியில், உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் நின்றிருந்த செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசியபோது

கோவை, திருச்சியைத் தொடர்ந்து மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. ஆனால், இந்நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது. இது போன்ற மிரட்டல்களுக்கு நான் அஞ்சமாட்டேன் என்றார் அவர்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரும்பக்கூடிய கூட்டணி கண்டிப்பாக அமையும். அதற்கு நேரம் இருப்பதால் போகப் போகத் தெரியும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிக மோசமான நிலையிலேயே உள்ளது என்றார் ஜெயலலிதா. கூடலூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உடனடியாக கொடநாடு எஸ்டேட்டுக்கு திரும்பிவிட்டார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்