இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

டெட்ரா பேக்கில் பதநீர்! முதல்வர் அறிமுகம்

E-mail அச்செடுக்க

சென்னை: அனைத்து சத்துக்களும் மிகுந்துள்ள இயற்கையாக கிடைக்கும் பதநீரைப் பருகுவதற்கு ஏற்ப, பதப்படுத்தி ஏறத்தாழ 40 நாள்கள் வரை கெடாமல் பாதுகாப்புடன் வைத்துப் அடைக்கப்படும் டெட்ரா பேக் முறையை முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பதநீரில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவைகளும், வைட்டமின்களும் அடங்கியுள்ளதால் இயற்கையான ஊட்டச் சத்து நிறைந்த உணவாகக் கருதப்படுகிறது. பதநீர் அருந்துவதால் உடலில் உள்ள எலும்புகள் வலுவடைகின்றன; பற்கள் உறுதிப்படுகின்றன; உடல் வெப்பத்தைத் தணிக்கிறது;  அம்மை நோயும் கண் நோயும் தடுக்கப்படுகின்றன; வயிற்றுப் புண் மற்றும் வயிற்றெரிச்சல் குறைகிறது; இத்தகைய சிறப்பு வாய்ந்த பதநீர் தற்பொழுது பாலிதீன் பதநீரில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவைகளும், வைட்டமின்களும் அடங்கியுள்ளதால் இயற்கையான ஊட்டச் சத்து நிறைந்த உணவாகக் கருதப்படுகிறது.

பதநீர் அருந்துவதால் உடலில் உள்ள எலும்புகள் வலுவடைகின்றன; பற்கள் உறுதிப்படுகின்றன; உடல் வெப்பத்தைத் தணிக்கிறது;  அம்மை நோயும் கண் நோயும் தடுக்கப்படுகின்றன; வயிற்றுப் புண் மற்றும் வயிற்றெரிச்சல் குறைகிறது; இத்தகைய சிறப்பு வாய்ந்த பதநீர் தற்பொழுது பாலிதீன் உறையில் அடைத்து காலை முதல் மாலை வரை விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின், பாதுகாத்து வைக்க முடியாமல் பதநீர் வீணாகிறது.

மேலும், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு மிட்டாய், பொடி செய்து நவீனமுறையில் பொட்டலம் செய்யப்பட்டுள்ள பனைவெல்லம் ஆகியவற்றையும் முதல்வர் கருணாநிதி இன்று (3.9.2010) அறிமுகப்படுத்தினார்.

பதநீரும் பிற பொருள்களும் இம்முறையில் விற்பனை செய்யப்படுவதன்மூலம் தமிழகம் முழுவதிலும் பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏறத்தாழ  32 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் கூடுதல் வருவாய் பெற்றுப் பயனடைவதற்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்