இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அரசின் ஏகாதிபத்தியப் போக்கினை ஒழிக்க அனைவரும் அணிதிரளுங்கள்

E-mail அச்செடுக்க

இலங்கை அரசாங்கத்தின் ஏகாதிபத்திய ஆட்சிமுறையை ஒழித்துக் கட்டுவதற்கு கட்சி பேதங்களை மறந்து அனைத்துத் தரப்பிலிருந்தும் எழுச்சிமிக்க சக்திகள் அணிதிரள வேண்டும் என்று களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமகூறியுள்ளார்.

காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சுமார் 8 மாதங்கள் விளக்க மறியலில் இருந்து, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மத்துகமவில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த வரவேற்பு வைபவத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், ' நிரூபிக்க முடியாத பொய்க் குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்தி என்னைச் சிறையிலடைத்தார்கள். இன்று நீதிமன்றம் என்னைப் பிணையில் விடுதலை செய்துள்ளது. மாகாணசபை அமைச்சராக சிறைக்குச் சென்ற நான், நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சிறையிலிருந்து வெளியே வந்திருக்கின்றேன். இந்நாட்டு மக்கள் எனக்குத் தோள்தந்து என்னை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியுள்ளனர்.

8 மாதங்களுக்கும் அதிகமான காலம் என்னை சிறையில் அடைத்து முடியுமான எல்லாவிதத்திலும் சித்திரவதைகள் செய்து என்னை அரசாங்கத்தின் பக்கம் வளைக்க முயன்றார்கள். ஆத்மாவை அடகு வைத்து தத்தம் வயிற்றை வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட அனேகர் நம்முடைய ஓட்டுக்களால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி, பின்னர் அரச தரப்பினராக மாறிப்போய் விட்டார்கள். ஆனால், இந்த பாலித்த தெவரப்பெரும உயிருள்ள வரை ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சியைக் கைவிட்டுச் செல்லப் போவதில்லை என்பதை சிறையில் இருந்து வந்து கூறுகின்றேன், குறித்துக் கொள்ளுங்கள்' என்று வீர முழக்கம் செய்தார்.

சிறையில் இருந்த என்னை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த என் அன்பார்ந்த மக்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்