பெய்ஜிங்: சீனாவின் பெய்ஜிங்-திபெத் நெடுஞ்சாலையில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 120 கி.மீ தூரமுள்ள பெய்ஜிங் திபெத் நெடுஞ்சாலையில் சுமார் 10,000 சரக்கு லாரிகள் சாலையில் நகரமுடியாமல் ஸ்தம்பித்து நிற்கின்றன.
மங்கோலியாவிலிருந்து நிலக்கரி ஏற்றி வரும் இரண்டு லாரிகள் சாலையின் நடுவில் மோதி கவிழ்ந்ததால் இந்தப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றுச் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அந்த சாலையில் செல்ல வேண்டிய வாகனங்களும் இந்தச் சாலையில் திருப்பி விடப்படுகின்றன இதனால் அதிக அளவிலான சரக்கு லாரிகளால் போக்குவரத்து மிகவும் மோசமாகியுள்ளது.
கடந்த மாதம் இதே சாலையில் ஏற்பட்ட வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலால் 10 நாட்களுக்கு மேலாக லாரிகள் ஒரே இடத்தில் ஸ்தம்பித்து நிற்கின்றன. சரக்கு லாரி ஓட்டுனர்கள் நின்ற இடங்களிலேயே விளையாடி கொண்டும் திறந்த வெளியில் தூங்கிக் கொண்டும் பொழுதைக் கழிக்கின்றனர். பீஜிங்கில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் நிலக்கரி உள்ளிட்ட கச்சாப் பொருட்கள் இந்த நெடுஞ்சாலை வழியாகவே வரவேண்டியுள்ளதால் இதற்காகவென்றே கட்டப்பட்டு வரும் நிலையில் இப்பிரச்சனை நிகழ்ந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் பீஜிங்- திபெத் நெடுஞ்சாலை, பீஜிங் ஸிங்ஜியாங் நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலால் கடும் பிரச்சனை ஏற்பட்டுவருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் இந்த 3 நெடுஞ்சாலைகளிலும் குறைந்தது மூன்று மிகப்பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




