இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ராகிங் கொடுமையால் மாணவி தற்கொலையா?

E-mail அச்செடுக்க

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணா பல்கலைக்கழகதைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ராகிங் கொடுமை காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், முள்ளுக்குறிச்சியை சேர்ந்தவர் மாதவன் இவரது மகள் ஜோதி  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் வீட்டிற்கு விடுப்பில் வந்த ஜோதி திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மென்மையான சுபாவம் கொண்ட மாணவி ஜோதி நன்றாக படிப்பவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது சகோதரரிடம் தொலைபேசியில் பேசிய போது தமது கல்லூரியில் இவரது சக மாணவர்கள் ராகிங் கொடுமை செய்வதாக கூறியுள்ளதாக, ஜோதி உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்போனில் என்னை காதலி என பல குறுஞ்செய்திகள் வந்துள்ளதாகவும் சொல்லி மிக வருத்தப்பட்டார் என்று உறவினர்கள் கூறியுள்ளனர். உறவினர்கள் கொடுத்த தகவலின்படி மாணவி தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்