ஓசூர்: டீசலில் தண்ணீர் கலப்படம் செய்து விற்றதாக புகார் எழுந்ததையடுத்து அந்த பெட்ரோல் பங்க்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 5 ஸ்டார் என்ற பெட்ரோல் பங்க்கில் டீசலில் தண்ணீர் கலந்து விறபனை செய்து வந்தது கண்டிபிடிக்கப்பட்டது நேற்று லாரி ஒன்றுக்கு, அதன் டிரைவர் டீசல் நிரப்பிச் சென்றார். பெட்ரோல் பங்க்கிலிருந்து சிறிது தூரம் சென்ற லாரி திடீரென எஞ்சின் இயங்காமல் அந்த இடத்திலேயே நின்றது. இதுகுறித்து லாரி ஓட்டுனர், லாரி உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
லாரி உரிமையாளர் கேசவரெட்டி, மெக்கானிக்குடன் லாரி இருக்கும் இடத்திற்கு சென்று, பழுது பார்த்ததில், டீசலில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரி உரிமையாளர் கேசவரெட்டி உள்ளிட்டோர் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர். பின்னர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் டீசலை ஆய்வு செய்தபோது, டீசலில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து பெட்ரோல் பங்க்கில் விற்பனை நிறுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




