இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

செல்ஃபோன் விற்பனையில் மீண்டும் முதலிடத்தில் நோகியா!

E-mail அச்செடுக்க

இவ்வருட செல்ஃபோன்கள் விற்பனையில்  சந்தையில் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள நிறுவனங்களில் மொபைல்போன் சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் நோகியா முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக நோகியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீல்சன் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  நோக்கியா நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் சிவகுமார் கூறுகையில் நோகியா நிறுவனம் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நம்பர் ஒன் தயாரிப்பு என்ற விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

கோல்கேட் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வாடிக்கையாளர்களின் மனதில் இடம் பிடிக்க நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்த தகுதி கிடைத்துள்ளது என்று கோல்கேட் பால்மோலிவ் (இந்தியா) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகுல் தியோராஸ் தெரிவித்தார். மூன்றாவது இடத்தை இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் லக்ஸ் சோப் பிடித்துள்ளது.

முன்னணியில் இருக்கும் பத்து பிராண்டுகளில் இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் ஆறு பிராண்டுகள் இடம் பெற்றுள்ளன என்பது கவனிக்கத்ததக்கது. சென்ற ஆண்டில் பதினெட்டாம் இடத்தில் இருந்த பேர் அண்ட் லவ்லி இவ்வாண்டில் ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் பாண்ட்ஸ் பிராண்டும் பதினாறாம் இடத்திலிருந்து, எட்டாவது இடத்திற்கு முன்னேறிச்சென்றுள்ளது. இவ்வாண்டு கிளினிக் பிளஸ் பிராண்டு ஏழாவது இடத்திற்கு முன்னேறி வந்துள்ளது.

சென்ற ஆண்டில் பதினைந்தாம் இடத்தில் இருந்தது. நிறுவனத்தின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளால் நிறுவனத்தின் பிராண்டுகளின் மதிப்பு உயர்ந்துள்ளது என்று இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிதின் பரஞ்பி தெரிவித்தார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்