புவனேஷ்வர்: இந்தியாவின் அதிநவீன சூப்பர் சானிக் குரூஸ் ஏவுகணையான பிரமோஸ் இன்று விண்ணில் ஏவப்பட்டு சோதித்துப் பார்க்கப்படுகிறது.
ஒரிசா மாநிலம் பாலசோர் அருகில் சந்திப்பூரில் கடல் நடுவே அமைந்துள்ள ராக்கெட் ஏவுகணை சோதனை தளத்தில் இருந்து இந்த ஏவுகணை சோதித்துப் பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள், இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
இந்த அதி நவீன பிரமோஸ் ஏவுகணை, இந்திய ரஷிய கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டது ஆகும். இது, ஒலியின் வேகத்தை விட 2 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடியது. இதில்,சுமார் 300 கிலோவரை எடையுள்ள மரபுசார்ந்த ஆயுதங்களை எடுத்துச்செல்ல முடியும். 290 கி.மீ. தூரம்வரை இது பாய்ந்து சென்று துல்லியமாக இலக்கை தாக்கும்.
நெரிசல் மிகுந்த நகரப்பகுதியிலும், எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களையும் துல்லியமாக தாக்கும் வகையில், இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




