பெய்ஜிங்: சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்ப பல்கலை கழகம் ஒரு வினாடியில் ஆயிரம் டிரிலியன் வேலைகளை செய்து முடிக்க கூடிய அதிவேக கணினியை கண்டுபிடித்துள்ளது. தியான்கி 1 என பெயரிடப்பட்டுள்ள இந்த கணினி இம்மாதம் பயன்பாட்டிற்கு வரஉள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு முதலே இதற்கான பணிகளை துவக்கி விட்டிருந்தது. கடந்த ஆண்டின் உலகின் முதல் 500 சூப்பர் கணினிகளில் 5 வது இடத்தை இந்த வகை கணினி பிடித்துள்ளது. 1.3மில்லியன் மக்கள் 88 ஆண்டுகளில் போட்டு வந்த கணக்குகளை இந்த வகை கணினிகள் ஒரு வினாடியில் போட்டு முடித்து விடும் என்பது இதன் முக்கிய அம்சமாகும்.
மேலும் 27 மில்லியன் புத்தகங்களை இதனுள் அடக்கி விடலாம் என்பது கூடுதல் தகவல். இந்த கணினி மூலம் அனிமேஷன், உயிரியல் மருத்துவம், வானுலகை ஆராய்வதற்கான வளர்ச்சி, செயற்கை கோள்களை கட்டுப்படுத்துதல், நீர்வள ஆதாரங்கள் போன்றவற்றையும் கண்டறியப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது

| < முந்தையது | அடுத்தது > |
|---|




