லக்னோ: பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த்து. இத் தீவிபத்தில் வேனில் இருந்த 15 குழந்தைகள் தீக்காயத்துடன் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அஷாம்கர் என்ற இடத்தில் இன்று அங்குள்ள பள்ளிக் கூடத்துக்கு சொந்தமான வேன் ஒன்று, குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது அந்த வேனில் இருந்த எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்டக் கசிவு காரணமாக வேனில் திடீரென தீப் பிடித்தது.
இதில் வேனில் இருந்த 15 குழந்தைகள் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேனில் இருந்து குழந்தைகளில் பெரும்பாலானோர் 7 வயது முதல் 8 வயதுக்கு உட்பட்டவர்கள். இச்சம்பவம் குறித்து அஷாம்நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




