இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

விஷமான தாய்ப்பால்! குழந்தை பரிதாப சாவு!

E-mail அச்செடுக்க

ஊத்துக்கோட்டை: தாமரைகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சையா (28). சித்ரா(25). தம்பதிகள். செஞ்சையாவின் மனைவி சித்ரா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சித்திராவிற்கு கடந்த  எட்டு மாதங்களுக்கு முன் பவானி என்ற குழந்தை பிறந்தது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த சித்ரா, அங்கிருந்த விஷத்தனமை கொண்ட இலையை அதன் தன்மையை அறியாமல் பறித்து சாப்பிட்டுள்ளார். சாப்பிடா சிறிது நேரத்தில் குழந்தை பவானி அழுததால், தாய்ப்பால் கொடுத்திருக்கிறார். தாய்ப்பால் குடித்த சிறிது நேரத்தில் குழந்தை பவானி வாயில் நுரை வந்து தலை துவண்டது.  சற்று நேரத்தில் சித்ராவும் மயங்கி கீழே விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சித்ரா மற்றும் குழந்தையை கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். சித்ரா சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பாக ஊத்துக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்