இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மத உணர்வு பற்றிய கேள்வித் தாள் தயாரித்த பேராசிரியர் பணி நீக்கம்!

E-mail அச்செடுக்க

கேரளா மாநிலம் தொடுபுழாவில் உள்ள நியூ மேன் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தவர் ஜோசப். கல்லூரியில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தேர்வில் இஸ்லாமிய மத உணர்வை புண் படுத்தும் வகையில் கேள்வித்தாள் தயார் செய்ததாக சர்ச்சை எழுந்தது.

 

இந்த சர்ச்சையை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் ஜோசப்பை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சுக்கு சென்று திரும்பிக் கொண்டு இருந்த ஜோசப்பை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியதில் அவரது வலது கை துண்டிக்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள  நிலையில் கல்லூரி நிர்வாகம் ஜோசப்பை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜோசப்  மன ரீதியாக மீண்டும் பணிக்கு திரும்ப என்னை தயார் படுத்தி வரும் நிலையில் இந்த பணி நீக்க உத்தரவு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகவும், பணி நீக்க உத்தரவை கல்லூரி நிர்வாகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜோசப் பணி நீக்கம் குறித்து கருத்து தெரிவித்த கல்லூரி நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் உணர்வுகளை காயப்படுத்திய காரணத்தினாலேயே ஜோசப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர்கள்  மன்னிக்கும் நிலையில் பணி நீக்க உத்தரவு மறு மரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்