திருச்செங்கோடு: காங்கிரஸின் மூத்த தலவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் வன்முறை தலை தூக்கியுள்ளது. அரசியல் பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது.என்னுடைய வீடு பெட்ரோல் குண்டுகளால் தாக்கப்பட்டுள்ளது.
மிரட்டல் என்பது அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் வருகிறது. தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு மிரட்டல்கள் விடுப்பது கண்டனத்துக்கு உரியது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மாநில அரசு திட்டங்கள் என தமிழக அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் தமிழகத்தில், குறிப்பாக ஆந்திர - தமிழ்நாடு எல்லையோரத்தில் அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள். அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




