இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நான் ரொம்ப தெளிவாக இருக்கிறேன்: விஜயகாந்த்

E-mail அச்செடுக்க

விருதுநகர் மாவட்ட தேமுதிக சார்பில் இன்று சிவகாசியில் வறுமை ஒழிப்பு தினம், கட்சியின் 6-ம் ஆண்டு தொடக்க விழா, அண்ணா பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

முப்பெரும் விழாவில் துணை செயலாளர் ஆஸ்டின், மாநில இளைஞர் அணி செயலாளர் சதீஸ், சிவகாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மா.ப.பாண்டியராஜன் உள்பட தென் மாவட்டங்களை சேர்ந்த தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.

முப்பெரும் விழாவுக்கு விருதுநகர் மாவட்ட செயலாளர் என்.டி.ராஜா தலைமை தாங்கினார். அவைத்தரைவர் காசிராஜன், பொருளாளர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

சிவகாசி பேருந்து நிலையம் அருகில் எம்.ஜி.ஆர். தெருவில் நடந்த இந்த கூட்டத்தில் பேசிய விஜயகாந்த்,  ‘’மக்களுக்கு தெரியாமல் நான் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன்.    நான் மக்கள் விரும்பும் கூட்டணியைத்தான் அமைப்பேன். என்னை தலைமையாக ஏற்று வருபவர்களோடுதான் கூட்டணி அமைப்பேன்.

நான் ரொம்ப தெளிவாக இருக்கிறேன்;  என்னை யாரும் குளப்ப முடியாது.  30, 40 சீட்டுக்கெல்லாம் மயங்க மாட்டேன். அதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டிருக்க மாட்டேன்’’ என்று அதிரடியாக தெரிவித்தார். நான் ரொம்ப தெளிவாக இருக்கிறேன்;  என்னை யாரும் குளப்ப முடியாது என்ற வாசகத்தை பேச்சின் இடையிடையே 10 முறைக்கு மேல் சொன்னார்.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: sam, September 17, 2010
VERY GOOD CAPTAIN.ARE YOU NOT DRINKING ALCOHOL NOWADAYS? KEEP IT UP TO MAY 11. AFTER WARDS, THE WHOLE DAY IS YOURS TO DRINK AS MUCH LIQUOR AS POSSIBLE.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்