புதுடெல்லி: டெங்கு, சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல்கள் வரிசையில் தற்போது புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று இந்தியாவில் பரவி வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை வைரஸ் காய்ச்சல்கள் நிறைய பேரை தாக்கி விட்டன. சிக்குன் குனியாவில் பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் உடல் வலியில் இருந்து மீள இயலாமல் கஷ்டப்படுகின்றனர் இந்த நிலையில் இந்தியாவில் புதிய வகை வைரஸ் ஒன்று ஓசையின்றி பரவி வருவதை டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். பன்றிக் காய்ச்சல் மெக்சிகோவில் தோன்றி உலகம் முழுக்க பரவியது போல இந்த புதிய வகை வைரஸ் ஆஸ்திரேலியா நாட்டில் தோன்றி பரவி உள்ளதாக இந்திய டாக்டர்கள் கணித்துள்ளனர்.
இந்த புது வைரஸ் காய்ச்சலுக்கு ஆஸ்திரேலியன் ராஸ்ரிவெர் வைரஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வைரஸ் டெங்கு, சிக்குன்குனியா வைரஸ்கள் போன்றே அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியது. புனே நகரில் முதல் கட்டமாக 4 பேருக்கு ராஸ் ரிவெர் வைரஸ் தாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. புதிய வகை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், உடனே அதன் அறிகுறிகளை கண்டு பிடிக்க முடியாது. உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.
உடல் எலும்பு இணைப்பு மூட்டுக்களை நாளடைவில் இந்த வைரஸ் தாக்கும். அத்தகைய சூழ்நிலையில் நடக்க முடியாத அளவுக்கு உடல் வலி ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

| < முந்தையது | அடுத்தது > |
|---|




