சேலம்: சேலத்தை அடுத்துள்ள ஓமலூர் அருகே 5 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கடத்தி காதை அறுத்து, கண்ணைத் தோண்டி, கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர்.
ஓமலூர் அருகே உள்ளது குப்பாண்டியூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகள் வனிதா(10). அங்குள்ள பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவி வனிதா தெருவில் விளையாட சென்றார். அதன் பிறகு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து வனிதாவின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் செய்தனர்..
இந்தச் சூழ்நிலையில் அக்கிராமத்தில் பெருமாள் என்பவருக்குச் சொந்தமான பாசண கிணற்றில் வனிதாவின் செருப்பு மிதந்ததையடுத்து கிராம இளைஞர்கள் சிலர் உள்ளே இறங்கி தேடிப் பார்த்தனர். ஆனால் கிணறு ஆழமாக இருந்ததால் தீயணைப்பு படையினருக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து சங்கிலி போட்டு தேடியபோது வனிதாவின் தலை அதில் சிக்கியது.
உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தபோது வனிதா மிகக் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவரது வலது கண்ணை தோண்டி எடுத்துள்ளனர். காதை அறுத்துள்ளனர். கழுத்தையும் அறுத்துள்ளனர். நரபலிக் கும்பல் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




