இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

உறவுகளை கொச்சைப்படுத்தும் இயக்குனர் சாமியின் கார் உடைப்பு

E-mail அச்செடுக்க

சென்னை: உயிர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் இயக்குநர் சாமி.   அந்த படத்தில் மைத்துனர் மீது அண்ணி ஆசைப்படும் விதமாக திரைக்கதை அமைத்திருந்தார்.  இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில் தற்போது சிந்து சமவெளி என்று அவர் இயக்கத்தில் வெளிவந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்தப்படத்தில் மாமனார் மருமகளை விரும்புவதாக கதை அமைத்திருக்கிறார்.

தொடர்ந்து இப்படி உறவுகளை கொச்சைப்படுத்தும் படங்களை எடுத்துவரும் இயக்குநர் சாமி மீது பொதுமக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தியேட்டரில் ரசிகர்களுடன் சென்று படம் பார்த்தபோது ரசிகர்கள் சாமியை அடிக்க பாய்ந்தனர்.  அதற்குள் காவலாளிகள் தடுத்து அழைத்துவந்துவிட்டனர்.

இந்த நிலையில் இன்று இயக்குநர் சாமி சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில்,  சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக்குறிய காட்சிகளை எடுத்ததற்காக என் மீது ஆத்திரப்பட்டு சில மர்ம நபர்கள் என் வீட்டுக்குள் புகுந்து தாக்கினர்.   என் காரை உடைத்துவிட்டு ஓடிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து கே.கே.நகர்.  போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கருத்துக்கள் (8)Add Comment
0
...
எழுதியவர்: Gokul, September 06, 2010
Foreign:சினிமா ஒரு பொழுதுபோக்கு அவ்வ‌ள‌வே, சின்ன‌ச் சின்ன‌ திரைய‌ர‌ங்குக‌ள்தான் அதுவும் கூட்ட‌மில்லா திரைய‌ர‌ங்குக‌ள். பார்வையாள‌ர்க‌ளை வ‌ர‌வ‌ழைக்க‌ காலைக்காட்சி பாதி விலை. ந‌டிக‌ர்க‌ளை யாரும் க‌ண்டுகொள்வ‌தில்லை
இங்கே(Tamil Nadu, Andhra, Karnataka): உல‌கின் மிக‌ப் பெரிய‌ ஜ‌ன‌நாய‌க‌ நாட்டில், சினிமா, ந‌ம் உயிரோடு க‌ல‌ந்துவிட்ட‌ விஷய‌ம்.ஆங்கில‌ப்ப‌ட‌ங்க‌ளில் ப‌டுக்கைய‌றை காட்சிக‌ள் இருந்தால் கூட‌ ஏதோ அரை நிமிட‌த்தில் அரை இருட்டில் முடிந்துவிடும். ஆனால் ந‌ம் ப‌ட‌ங்க‌ளோ கொச்சையான ந‌ட‌ன‌ அசைவுக‌ள், தொப்புளில் ஆம்லேட் போட‌ ஆர‌ம்பித்து விருந்து சாப்பாடே த‌யார் செய்வார்க‌ள். Indian masala(spicies)என‌ netல் தேடினால் ந‌டிகையின் ம‌ஜா ப‌ட‌ங்க‌ள்தான் வ‌ருகிற‌து. வாழ்க்கையில் காத‌ல் ஒரு அங்க‌ம், காத‌லைத் த‌விர‌ ம‌னித‌ வாழ்க்கையில் வேறு எத்த‌னையோ நிலையிருக்கிற‌து ஆனால் வேறு எதைப்ப‌ற்றியும் சிந்திப்ப‌தில்லை. ந‌டிக‌ன்தான் உயிர் பொருள் ஆவி எல்லாம்.ந‌டிப்பையும் மீறி அவனுக்கு த‌னி ம‌னித‌ வழிபாடு,ஏதோ அவ‌ன் கூட‌வே இருந்த‌வ‌ர்க‌ள்போல‌ அவனுக்கு வ‌க்கால‌த்து வாங்குவ‌து, அவனும் இளைஞ‌ர்க‌ளை உசுப்பேற்றி அவ‌ன் மார்கெட்டை நிலை நிறுத்திக்கொள்கிறான். அவர்க‌ளின் ப‌ட்ட‌ப் பெய‌ர்க‌ளையும் அவர்க‌ளையும் நினைத்தால் வேத‌னையாய் இருக்கிற‌து.
0
...
எழுதியவர்: காதர், September 07, 2010
இந்த மாதிரி திரைப்பட இயக்குனர்கள் சாமி !! (பெயரைப் பாருங்கள் - கஷ்டகாலங்க) எஸ், ஜே. சூர்யா, பேரரசு போன்றோர் பிட்டுப் படம் எடுப்பவர்களை விட கொடூரமானவர்கள்.இவர்களுக்கு சமூக நலன், கலாச்சாரம் இவைகளைப் பற்றி கொஞ்சம் கூட அக்கரை கிடையாது.
ஆபாசம், கட்டுக்கடங்கா வன்முறைக் காட்சிகள் இதுகளுக்கு துணைபோகும் நடிக நடிகையர், நடிகனுக்கு முதல்வர் பதவி + உயிர்! கொடுக்க,கர்புக்கு இலக்கணமான குஷ்பு! போன்ற நடிகைகளுக்கு கோயில் கட்ட தயாராக இருக்கும் நமது உன்னதமான தமிழ் ரசிககர்கள் இருக்கும் வரை இத்தகைய இயக்குனர்கள், சினி'மாக்கள் ' வரத்தான் செய்யும்.கேட்டால் கருத்து சுதந்திரமாம். த்தூ... நாசமா...ப்போக.
0
...
எழுதியவர்: jagan, September 07, 2010
enarumai iniya tamil makkale inda maadiri padangalai PURAKKANIUNGAL IDHU DHAAN ARE VAZGHI
0
...
எழுதியவர்: சாபு-சிக்கன், September 07, 2010
மோசமான படங்களைப் புறக்கணிப்பதே ரசிகனுக்கும் சமூகத்திற்கும் நல்லது. அதை விடுத்து வன்முறையை கைக்கொள்வதால் பலனில்லை.

ஒரு சாமி போனாலும் வேறு ஆசாமி வருவான். ஆனால், ஒரு 'சிந்துசமவெளி'யை தியேட்டரை விட்டு விரட்டிவிட்டால், இப்படி படமெடுக்கும் "நாகரீகம்" மறைந்து போகும். அதனால் தான் சொல்றேன். மோசமான படங்களைப் புறக்கணிப்பதே சிறந்த தீர்வு.
ஆனால் நயவஞ்சகம் சமூகத்தில் இருக்கும்வரை இந்தத் தீர்வும் சாத்தியமில்லை.
அப்ப, முதலில் சமூகம் தன் நயவஞ்சகத் தன்மையிலிருந்து வெளிவர வேண்டும்.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று தமிழில் சொல்வார்கள்.
0
...
எழுதியவர்: குலாம், September 10, 2010
சினிமா என்ற பெயரில் தான் விருப்பப்படி எப்படியெல்லாம் படம் எடுக்கலாம் என்ற மோசமான சிந்தனை மாற வேண்டும். அதற்கு வன்முறை மூலம்தான் தீர்வு என்றால் அதை செய்வதில் தவறு இல்லை. இயக்குனர் சாமியை தாக்கிய சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சம்பந்தப்பட்ட நப்ர்களை பாராட்டுகின்றேன்!
0
...
எழுதியவர்: முரளிதீர தொண்டைமான், September 10, 2010
ஒரு கடைக்கோடி கூத்தாடிக்கு கிடைக்கும் முக்கியத்துவமோ, அங்கீகாரமோ நம் நாட்டின் ஓரு சாதாரண ஏழை விவசாயிக்கோ, ஒரு மீனவனுக்கோ (அ) ஒரு மாணவனுக்கோ கிடைக்குமா?

பணம், (மொக்கை)புகழ் இருக்கிறதென்பதற்க்காக மட்டும் ஏன் கூத்தாடிகளை தலையில் வைத்து தூக்காத குறையாக முக்கியப்படுத்துகிறீர்கள்? அவர்கள் என்னத்தை செய்தார்கள் இந்த் மக்களுக்கு? ஒரு உதாரணம்: கடந்த குறைந்த காற்றழுத்தத்தின் விளைவாக மிகுந்த மழையினை தமிழகம் எதிர்கொண்டது, இதில் நீலகிரியில் பெரும் நிலச்சரிவு, பல வீடுகள் தகர்ந்து தரைமட்டமாயின மேலும் 65 க்கும் மேற்ப்பட்ட மனித உயிர்கள் பலியாயின மேலும் இழப்பு மதிப்பு சுமார் 200 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டது. அரசும் துரிதமாக மீட்ப்பு பணிகளை முடிக்குவிட்டது, பிற தொண்டு நிறுவனங்களும், தன்னார்வு அமைப்புகளும் தங்களால் இயன்ற உதவிகளை கொடுப்பதாக அறிவித்தன. மேலும் திருப்பூரை சேர்ந்த சில பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆயுத்த ஆடைகளை கொடுத்ததாக ஒரு நாளேட்டில் வெளியாகியிருந்தது.

இந்நிகழ்வுகள் இருக்க, உதகையின் இயற்கை பிரதேசங்கள் காட்டி பெரும் தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன இதை யாரும் மறுக்க முடியாது! அதைவைத்து தமிழ் திரைஉலகமும் பெரும் பணம் சம்பாதிதிதுக்கொண்டன. ஆம் என்னுடைய வினா என்னவென்றால்? புயலினால் சேதமான அன்டை மாநிலத்திற்க்கு பல லட்சங்கள் நிதியுதவி அளித்த இந்த திரையுலக கூத்தாடிகள் ஏன் இங்கே உதகையில் ஏற்ப்பட்ட நிலச்சரிவின்போது இவர்க்ளால் எந்த நிதியுதவியும் கொடுக்க மனமில்லை அதிலும் தமிழக (தறிகெட்ட‌)இளைஞர்களால் பெரிதும் போற்றப்படும் கூத்தாடிகள் குறைந்த்து ஒரு வெற்றறிக்கைகூட வெளியிடவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது. அதுவும் மேடைக்குமேடை இவர்கள் தமிழகம்தான் எங்களுக்கு வாழ்வு கொடுத்தது என்று வெட்டி பேச்சுக்கள் பேசுவது அதையும் இந்த மக்கள்.... என்னத்த சொல்லுவது?! யோசித்து பாருங்கள் தமிழக மக்களே கொஞ்சம்!

ஒரு நடிகை அவள் யார்? அவளின் பூர்வீகம் என்ன? அவள் நாட்டுக்காக என்ன செய்தாள்? அவளால் தமிழ் நாட்டு மக்கள் என்ன பயன் அடைந்தார்கள். ஆனால் எளிதாக அவளெல்லாம் நாட்டின் முதலமைச்சரை பார்க்கமுடிகிறது அதைக்கொண்டு அவர்கள் பெரும் கோடிகள் குவித்துவிடுகிறார்கள்.

ஒரு ஏழை விவசாயியோ, மீனவனோ அதை போல உங்களை பார்க்க முடியுமா? அவர்களையும் கூப்பிட்டும் வைத்து படம் எடுப்பீங்களா? என்ன கொடுமை இது? இந்த மட்டமான சுயநலத்தனமான சினிமா கலாச்சாரத்திற்க்கு நாம் ஒரு முடிவு கட்டியாகவேண்டும்.. ஒரு ஆரோக்கியமான சினிமா கலாச்சாரத்தை உருவாக்கவேண்டும். மேடையில் தோன்றும் ஒரு கூத்தாடி சாதாரன் மக்களுக்காக தெருவில் இறங்கிபோராடமுடியுமா? எத்தனையோ நிகழ்வுகள் எடுக்கப்பட்ட இந்த திரையுலகில் ஒரு விவசாயியோ, ஒரு மீனவனோ படும் பாட்டினை உண்மையாக எடுக்க முடியுமா....? இன்னும் எத்தனையோ வினாக்கள்..

தமிழன் எவ்வளவோ படித்து உயர்பதவியில் இருகிறான் இங்கேயும், வெளிநாட்டிலும் ஆனால் சினிமாவையும், அரசியலையும், நாட்டையும் இன்னும் பிரித்து பார்த்து அறிந்துகொள்ளாமல் இருக்கிறான்... இது எங்கே போயி முடியும் என்று தெரியவில்லை..

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள், மீனவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கபடுகிறார்கள்... எந்தெந்த பன்னாடை பரதேசிகளெல்லாம் தொடர்ந்து முன்னிறுத்தப்படுகிறார்கள்.. நினைத்தால் நெஞ்சுபதைக்குது..
0
...
எழுதியவர்: anees, September 12, 2010
where is sensor board ? what the hell they are doing who's responsibility to control this idiotic issues.
0
...
எழுதியவர்: Nena, September 13, 2010
Good films getting appreciation and awards.. similarly bad movies should get punishment and govt should pubish the name (of the director) and shame him with photo and should give full page add not to see such movies otherwise simply ban the screening of the movie.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்