இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஆந்திராவில் ரெட்டிக்கு 1 லட்சம் சிலைகள் திறக்கப்படும்!

E-mail அச்செடுக்க

ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மரண செய்தி கேட்டு இறந்த தொண்டர்கள் குடும்பத்திற்கு அவரது மகன் ஜெகன் மோகன்ரெட்டி ஆறுதல் கூறி வருகிறார். அவர் செல்லும் இடம் எல்லாம் ராஜசேகர ரெட்டியின் சிலைகளை திறந்து வைத்து வருகிறார்.

இதற்கு சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து நாயுடு கூறும்போது, ராஜ சேகரரெட்டி ஆந்திராவுக்கு அப்படி என்னதான் செய்து விட்டார். அவருக்கு அனைத்து ஊர்களிலும் சிலை வைப்பது நல்லதல்ல என்றார். இதையடுத்து சந்திரபாபுநாயுடுவுக்கு ஜெகன்மோகன்ரெட்டி ஆதரவாளரும், விவசாய மந்திரியுமான ரகுவீரா ரெட்டி கண்டனம் தெரிவித்தார்.

அவர்,  ராஜசேகர ரெட்டி ஆந்திராவில் நீர்பாசனத்துக்காக அதிக அணைகள் கட்டி ஏராளமான விவசாய நிலங்களுக்கு பாசன வசதி செய்து கொடுத்துள்ளார். அவர் தான் எங்களுக்கு கண் கண்ட தெய்வம். அவருக்கு விரைவில் ஒரு லட்சம் சிலைகள் வைப்போம். யாரும் தடுக்க முடியாது’’ என்று கூறியுள்ளார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்