மதுரை: மதுரை அருகே நிகழ்ச்சி ஒன்றில் நேற்று இரவு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துக் கொண்டு பேசினார். அதில் அவர், திமுகவின் ஆட்சி மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். விலைவாசி, மின் தட்டுப்பாட்டினால் கடும் கோபம் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் காண விரும்புகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்கும்.
திமுகவின் அராஜகங்களை எதிர்கட்சித்தலைவர் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது அவசியமாகிறது. அதனால்தான் அதிமுக தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடத்துகிறது. திமுக மீது உள்ள அதிருப்தியினால்தான் அதிமுகவுக்கு கூட்டங்களில் மக்கள் அலை மோதுகிறது. கோவை,திருச்சியைப்போல் மதுரையிலும் கூட்டம் நடத்த வேண்டியது அவசியமாகிறது.
செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று இந்த ஆட்சிக்கு எதிரான சில உண்மைகளை வெளியிடுவேன்’’என்று ஆவேசமாக பேசினார்.
அவர் மேலும், ‘’கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையை உடைக்க திட்டமிட்டிருக்கிறது. அப்படிச்செய்தால் கேரள மக்கள் பல விபரீதங்களை சந்திக்க நேரிடும்’’என்று தெரிவித்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




