ஜெய்பூர் : ராஜஸ்தானில் கடந்த 3 நாட்களாக மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் 16 நோயாளிகள் உரிய சிகிச்சையின்றி மரணித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஞாயிறன்று ஜோத்பூரில் மருத்துவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்து ஜோத்பூரில் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் ஜெய்ப்பூர், அஜ்மீர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு பரவியது.
மருத்துவ சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், நோயாளிகளின் உறவினர்கள் ஒவ்வோர் வார்டு வார்டாக சிகிச்சைக்காக அலையும் காட்சி வேதனையாக உள்ளது. ஜோத்பூரில் மாத்திரம் 6 குழந்தைகள் உள்ளிட்ட 16 நபர்கள் இறந்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் திவேதி இது கவலையளிப்பதாக உள்ளது என்றும் மருத்துவர்களின் பொறுப்பற்ற தன்மையால் ஒரு உயிர் கூட பலியாக கூடாது என்றார். இச்சூழலில் மருத்துவர்களில் ஒரு பிரிவினர் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|