இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பேருந்து எரிப்பு வழக்கு தூக்கு தண்டனை கைதிகள்: குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்ப முடிவு

E-mail அச்செடுக்க

வேலூர்:தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குதண்டனை பெற்ற கைதிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு ஒன்றை அளிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த 2000ஆம் ஆண்டு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் உயர்நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சியினர் பல இடங்களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண் பல்கலைக்கழக பேருந்து எரிக்கப்பட்டது. இதில் அக்கல்லூரி மாணவிகள் மூன்று பேர் உயிர் இழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அதிமுவைச் சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்து தீர்பளித்தது. இதனை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவர்களுக்கான தண்டனையை உறுதி செய்தது. அதன்பிறகு இம்மூவரும் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முறைப்படி தங்களுக்கு வந்து சேர்ந்தவுடன், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு கருணை மனு அனுப்ப தூக்குதண்டனை கைதிகள் முடிவு செய்துள்ளனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்