பீஜிங்: தெற்காசியாவின் அமைதிக்காக இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் தடம் பதிக்க சீனா முயற்சி செய்வதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கூறியிருந்த நிலையிலேயே, பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் ஜியாங் யூ மேற்கண்டவாறு கூறினார்.
ஆசியாவின் ஒரு முக்கியமான நாடு என்ற அடிப்படையில் தெற்காசியாவில் அமைதியும், நிலைத்தன்மையும் ஏற்பட இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது என்று கூறிய ஜியாங் யூ, தெற்காசியா உள்பட ஆசியாவின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பாதுகாக்க தமது நாடு உறுதி பூண்டுள்ளது என்றார்.
மேலும் இந்தியாவும், சீனாவும் வளரும் சக்திகளாக உருவெடுத்து வருவதாகவும், பொது நலன்கள் கருதி இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஜியாங் தெரிவித்தார்.

எழுதியவர்: யாழ், September 08, 2010

| < முந்தையது | அடுத்தது > |
|---|




