இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - ஜெயலலிதா

E-mail அச்செடுக்க
 

 

 

அண்மையில், திருவாருர் மாவட்டம் திருவிடைச்சேரியில் முஸ்லிம்களில் இரு பிரிவினரிடையே கலவரமும் துப்பாக்கிச் சூடும் நடந்தது. அந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.



அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

 திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம், திருவிடைச்சேரியில் ஒரு பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், திருவிடைச்சேரி அதிமுக கிளைச் செயலாளர் ஜபருல்லாவின் மைத்துனர் முகமது மற்றும் அந்த ஊரின் ஜமாத் தலைவர் இஸ்மாயில் ஆகியோர் மரணமடைந்த செய்தி கேட்டும், அந்த வழியே சென்று கொண்டிருந்த சேதனிபுரம் ஊராட்சி, விழுதியூர் அதிமுக கிளைச் செயலாளர் பால்ராஜ் மகன் சந்தியாகு, விழுதியூர் கிளை ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ராமதாஸ் மற்றும் அந்த ஊரைச் சேர்ந்த ஹாஜா ஆகியோர் படுகாயமடைந்த செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன். இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்தஇரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.

திருவிடைச்சேரியில் நடைபெற்ற கலவரத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். எனவே, அந்தப் பகுதியில் இயல்பு நிலை திரும்ப தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: mohamed ali jinnah, September 08, 2010
யார் மீது குற்றம் .போதிய கல்வி இல்லை.சமுதாய மக்கள் கல்வியில் பின்தங்கியுள்ளார்கள்

அல்லாஹ் தான் நாடியோருக்கு கல்வி ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகளை வழங்கப்பட்டுவிட்டனர். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 2:269).

மார்க்கம் சொல்லித் தருபவர்வர்கள் சரியில்லை .குரானையும் ஹதீசையும் விடுத்து மற்றதனை பேசி நமக்குல் பிரிவினை உண்டாக்குகின்ரனர் . காலம் எல்லாம் தொழுதாலும் என்ன பயன் . இறைவன் நமது தொழுகையினை ஏட்றுக் கொள்வானா !

இஸ்லாம் என்றால் அமைதி என்ற விளக்கம் என்ன ஆனது!
பணம் மற்றும் பொய்யான புகழுக்கும் ஆசை ஆனால் அல்லாஹ்வின் அருள் மீது நாட்டம் இல்லை. கவுரவம், பிடிவாதம் இருக்கும் வரை தீவிரவாதம் வளர வாய்ப்பு
உண்டு . நாத்திகம் வளரும்,
மனித நேயம் போய்விடும் .
ஆன்மீகம் வளர வழி !
தன் குற்றம் பார்க்கட்டும் .


தவறு செய்பவரைவிட தவறு செய்ய தூண்டுபவன் மிகவும் கொடியவன் அதிகம் தண்டிக்கப் பட வேண்டியவன்.

மனம் மிகவும் வேதனை அடைகின்றது.


அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்