இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வினோத் காம்ப்ளி கிறிஸ்துவரானார்

E-mail அச்செடுக்க
மும்பை :  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கிறிஸ்துவத்தை ஏற்று கொண்டார். பந்த்ராவில் உள்ள சர்ச்சில் இடது கை பேட்ஸ்மேனான வினோத் காம்ளி ஞானஸ்தானம் செய்து கொண்டார்.கிறிஸ்துவத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறிய பாகிஸ்தான் வீரர் முஹம்மது யூசுப்பின் மத மாற்றத்துக்கு பின் கிரிக்கெட் உலகில் நடந்த குறிப்பிடத்தக்க மத மாற்றமாக விளங்குகிறது.
38 வயதாகும் வினோத் காம்ப்ளி இன்னும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறும் என்ற நம்பிக்கை இழக்காமலே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தினந்தோறும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபடும் காம்ப்ளியின் திறமையில் தனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் வீணாக்க மாட்டார் என்றும் காம்ப்ளியின் முன்னாள் கோச் சந்திரகாந்த் பண்டிட் கூறினார்.
மேலும் காம்ப்ளி மீண்டும் இந்திய அணியில் இடம் பெற வேண்டுமானால் குறிப்பிட்ட சில போட்டிகளில் ஆடுவதை தவிர்த்து அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்றும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதும் அவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் கூறினார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
நுனிப்புல்