காபூல் : ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகளை எதிர்த்து போராடி கொண்டு இருக்கும் தாலிபான் தலைவர் முல்லா முஹம்மது உமர் ஆப்கனில் தாலிபன் போரில் வெற்றி பெற்று கொண்டு வருவதாகவும் அமெரிக்கர்கள் விரைவில் தங்கள் படைகளை வாபஸ் பெறுவதன் மூலம் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தவிர்த்து கொள்ளுமாறும் எச்சரித்துள்ளார்.
ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போராடும் போரில் வெற்றி பெறும் நேரம் நெருங்கி விட்டது என்றும் அப்பாவி பொதுமக்கள் மீது எச்சூழலிலும் தாக்குதல் நடத்த கூடாது என்றும் அவ்வறிக்கையில் கூறியுள்ள முல்லா உமர் ஒரு வலிமையான, சுதந்திரமான, பரிபூரணமான இஸ்லாமிய அரசை உருவாக்குவதே தம் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்க மக்களை அவர்களின் ஆட்சியாளர்கள் கடந்த 9 வருடமாக பொய்யை சொல்லியே ஏமாற்றி வருவதாகவும், 9 வருடங்கள் கழிந்தும் அவர்களின் விருப்பம் நிறைவேறவில்லை என்றும் இனி மேலாவது அமெரிக்க மக்கள் தங்கள் நாட்டு வீரர்கள் உயிரிழப்பதையும் தங்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|