இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ம்ஹூம்! பா.ம.க. இல்லாவிட்டால் ஆட்சியமைக்க முடியாது: அன்புமணி

E-mail அச்செடுக்க

தமிழகத்தில் பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்:

தமிழகத்தில் பெரும்பாலான பெண்கள் கணவனை இழப்பதற்கு மதுப்பழக்கம் முக்கிய காரணம். இதனால் சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் மதுக்கடைகளை தமிழக அரசு அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் பெண்களை திரட்டி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை வரும். சிறைக்கு போகவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

பின்னர் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், விவசாய முன்னேற்றத்திற்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்த வேண்டும். கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் பின்தங்கியுள்ள நிலை மாற வேண்டும். தமிழகத்தில் பாமக துணையின்றி எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: sam, September 17, 2010
You too Mr. ANBUMANI, in the serial of DOWNTRODDEN politicians like VIJAYAKAN and Mr,ELANGOVAN? Do u know one TAASMAC particular that most of the BARS in T.N are run by your PARTY MEN? First, clean your FACE before indicating others. Is it possible for u to order ur PARTY MEN to get rid of THE BAR BUSINESS?

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்