கோயம்பேடு : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் பலவகையான பழங் கள் குவிந்துள்ளதால், மார்க்கெட் களை கட்டியுள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் வீடுகளில் அன்றைய தினம் பொரிகடலை, கொழுக்கட்டைபடையல் வைக்கப்படும். அதில், விளாம்பழம், காட்டு கலாக்காய், பெரப்பம் பழம், நாவல் பழம், பேரிக்காய், மக்காச்சோளம் ஆகியவை இடம்பெறும். இவ்வகை பழங்களுடன் ஆப்பிள், கொய்யா ஆகியவையும் கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்துள்ளன.
உள்ளூரில் இருந்து கொண்டு வரப்பட்ட பழங்கள் தவிர, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் லாரிகளில் பழங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. கலாக்காய், பெரப்பம்பழம், நாவல் பழத்தை சாக்குப்பையில் நேற்று வாங்கிச்சென்றனர். 100 எண்க்கை கொண்ட விளாம்பழம் 70ரூபாய் முதல் 150 ரூபாய்வரை விற்கப்பட்டது. சில்லறை விற்பனையில் விளாம்பழம் ஒன்று மூன்று முதல் ஐந்து ரூபாய் வரை விற்கப்படுகிறது. கரும்பு 20 முதல் 25கொண்ட ஒரு கட்டு 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான பழ வகைகள் கோயம்பேடு மார்க்கெட்டில்குவிந்துள்ளதால், மார்க்கெட் 'களை' கட்டியுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




