இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பாபர் மசூதி உரிமைகோரும் வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவோம். - பா.ஜ.க

E-mail அச்செடுக்க
1பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பு எதிரானதாக இருந்தாலும் நீதிமன்றத்தின் உத்தரவை பாரதிய ஜனதா கட்சி மதிக்கும் என்று அறிவித்துள்ளது.
இம்மாத இறுதியில் இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளதையடுத்து நாடு முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. உ.பியில் மதக்கலவரம் வெடிக்கலாம் என்று அம்மாநில அரசு கருதுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தீர்ப்பு குறித்து பாஜக தேசிய துணைத் தலைவர் கல்ராஜ் மிஸ்ரா கூறுகையில், இவ்விசயத்தில் எங்கள் கட்சியின் நிலைப்பாடு தெளிவானது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை அயோத்தி இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எத்தகைய தீர்ப்பை அளித்தாலும் அதை நாங்கள் மதித்து ஏற்போம். நீதிமன்றத் தீர்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அயோத்தியில் தற்போதைய இடத்தில் ராமர் கோவில் இருந்ததா, இல்லையா என்ற ஐயம் யாருக்கும் எழத்தேவையில்லை என்றார் மிஸ்ரா.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்