புதுடெல்லி: இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிக்கும் ஏழை மக்களுக்கு, இலவச சமையல் காஸ் இணைப்பு (எல்.பி.ஜி.,) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.
நம் நாட்டிலுள்ள ஏழைகளின் நலன் கருதி மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது தமிழக அரசு ஏற்கெனவே இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் மத்திய அரசும் நாடு முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது புதிதாக எரிவாயு இணைப்புப் பெற விரும்பும் வாடிக்கையாளர் பிணைத் தொகையாக 1,250-ம், ரெகுலேட்டருக்கு 150-ம் ஆக மொத்தம் 1,400 செலுத்த வேண்டும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு அளிப்பதற்காக பட்ஜெட்டில் 490 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி இத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர் வரும் 2015 ஆம் ஆண்டுக்குள் மண்ணெண்ணெய் மற்றும் விறகு அடுப்புக்கு மாற்றாக சுற்றுச் சூழலை பாதிக்காத எரிவாயு அடுப்புகளை உபயோகிக்கும் முறையை நாடு முழுவதும் கொண்டு வர முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு ஒரு கோடி சமையல் வாயு இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், இலவசமாக வழங்கப்படும் 35 லட்சம் சமையல் வாயு இணைப்புகளும் அடங்கும்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




