மும்பை : வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தை, ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. பங்குச்சந்தையில் இன்று பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டது. சென்செக்ஸ் 150 புள்ளிகள் வரை வளர்ச்சி கண்டது. கோடக் மகிந்திரா பேங்க், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ், ரிலையன்ஸ் கேப்பிடல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உச்சத்தில் இருந்தன.
காலை 09.03 மணி நிலவரப்படி, 19,278 புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 139 புள்ளிகள் அதிகரித்து 19346.36 புள்ளிகளாகவும், 5780.55 புள்ளிகளில் துவங்கிய தேசிய பங்குச்சந்தை (நிப்டி), 36 புள்ளிகள் அதிகரித்து 5795.55 புள்ளிகளாகவும் வர்த்தகம் முடிவடைந்தது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




