இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு

E-mail அச்செடுக்க

சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று வரலாறு காணாத அளவிற்கு ஒ‌ரே நாளில் அதிரடி விலை ஏற்றம் காணப்படுகிறது. சென்ற வாரம் குறைந்து வந்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 ம், பார் வெள்ளி விலை ரூ.95ம் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1793 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.19275 ஆகவும் உள்ளது.

ஒரு சவரன் தங்கம் ரூ.14344 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.34.75 க்கும், பார் வெள்ளி விலை ரூ.32490 க்கும் விற்கப்படுகிறது.

தங்கம் விலை ஒரே நாளில் மிக அதிக அளவில் உயர்ந் திருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தி.நகரை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் கூறும்போது, தங்கத்தின் திடீர் விலை உயர்வுக்கு ஆன் லைன் வர்த்தகமே காரணம்.

ஒரு காலத்தில் பங்குச்சந்தையில் முதலிடு செய்த பலர் தற்போது தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் பவுன் விலை ரூ.20 ஆயிரம் வந்தாலும் ஆச்சரியப்பட தேவை இல்லை. திடீர் தங்க உயர்வால் கடைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது என்றார்.

திருமண சீசன் என்பதால் இன்று ஏராளமான பெண்கள் கடைகளுக்கு நகை வாங்க வந்திருந்தனர். அவர்களில் பலர் தங்கம் விலை ரூ.168 உயர்ந்திருப்பதை அறிந்ததும் நகை வங்காமல் திரும்பிச்சென்றனர். அவர்கள் கூறும் போது, தங்கம் விலை போகிற போக்கை பார்த்தால் இனி நகையே வாங்க முடியாது தான்.

கடந்த ஆண்டு முதலே விலை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது. குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்றனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்