சென்னை : நீண்ட காலமாக கிசுகிசுவாக இருந்த பிரபு தேவா – நயன் தாரா காதல் தற்போது உண்மையாகி உள்ளது. தற்போது சந்தோஷ் சிவனின் மல்சேஜ் கட் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி கொண்டிருக்கும் பிரபல நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா தனக்கும் பிரபல தமிழ் நடிகையுமான நயன் தாராவுக்கும் உள்ள காதலை ஒத்து கொண்டார்.
மேலும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று சொன்ன பிரபுதேவா திருமண நாளை அறிவிக்கவில்லை. இவ்வருட இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் வில்லு படப்பிடிப்பில் சந்தித்ததிலிருந்து காதலில் இருக்கும் இருவரும் அவர்களின் தொடர்பு பற்றி நிருபர்கள் கேட்ட போதெல்லாம் மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு முன் தன் மனைவியை விவாகரத்து செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படும் பிரபு தேவா அதை குறித்து கருத்து கூற மறுத்து விட்டார். மேலும் திரைப்படங்களில் பார்ப்பது போல் அல்லாமல் நயன் தாரா மிகவும் எளிமையானவர் என்றும் வீட்டு பறவை என்றும் கூறினார். திருமணத்திற்கு பிறகு நயன் தாராவும் நடிப்பு தொழிலுக்கு முழுக்கு போடுவார் என்றும் தெரிகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




