காஷ்மீர் மக்களின் சுயமரியாதை, கெளரவம், பாதுகாப்பு ஆகியவை இந்தியாவுடன் இருந்தால் மட்டுமே சாத்தியம் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். காஷ்மீரில் கடந்த மூன்று மாதங்களாக இருந்து வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அனைத்து கட்சி குழு, ப.சிதம்பரம் தலைமையில் காஷ்மீர் சென்றுள்ளது.
பல் வேறு கட்சிகளுடனான சந்திப்பில் பேசிய திரு சிதம்பரம், இந்தியாவினால் மட்டுமே காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும், பிரிவினை ஒரு போதும் பயனளிக்காது என குறிப்பிட்டார்.
தேசிய மாநாட்டு கட்சி சந்திப்பு
முன்னதாக ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சி, அனைத்து கட்சி குழுவை சந்தித்து காஷ்மீருக்கு சுயாட்சி அளிப்பது தான் பிரச்சினைக்கு தீர்வு என்றும், பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறை அதிகாரங்களை வழங்கலாம் என தெரிவித்தார்.
மக்கள் ஜனநாயக கட்சி, ஹூரியத் மாநாடு கட்சிகள் புறக்கணிப்பு
ஏற்கனவே அறிவித்தப்படி, அனைத்து கட்சி குழுவை, மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும், ஹீரியத் மாநாடு கட்சியும் புறக்கனித்தன. ஊரடங்கு உத்தரவால் மக்கள் பெருமளவு பாதிக்கப்ப்ட்டு இருப்பதாகவும், இதனால் சாமன்ய மக்கள் வெளியில் வராத சூழ்நிலையில், பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என கூறியுள்ளனர்.
இதற்கிடையே, அனைத்து கட்சி குழுவை சேர்ந்த சீதாராம் யெச்சூரி மற்றும் டி ஆர் பாலு ஆகியோர் ஹூரியத் தலைவர் ஜீலானி, காஷ்மீர் விடுதலை முன்னனி தலைவர் யாசின் ஆகியோரை தனியே சந்தித்து பேசினர்.
100 பேர் பலி
கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் பல்வேறு வன்முறை சம்பவங்களில் 100 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




