இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அமெரிக்காவில் நோயுற்ற தாயுடன் சோனியா காந்தி

E-mail அச்செடுக்க

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தன் தாயார் பவுலா மைனா நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவருடன் இருப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிகிறது. சமீப காலங்களில் இரண்டாம் தடவையாக சோனியா தன் தாயாரின் உடல்நிலை பொருட்டு அமெரிக்கா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை சோனியா தலைமையில் கூடிய மத்திய காங்கிரஸ் தேர்தல் கமிட்டி கூட்டத்தில் வரக்கூடிய பீஹார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கூடிய காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட போதும் இன்னும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை.

சோனியாவின் வருகை தாமதமாகும் பட்சத்தில் ராகுலின் வழிகாட்டுதலின் பேரில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும் என தெரிகிறது. மேலும் மஹாராஷ்டிராவில் வரும் 29ம் தேதி நடக்க இருக்கும் தேசிய மாதிரி அடையாள அட்டை தொடக்க விழாவில் சோனியா கலந்து கொள்வாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தேசிய அடையாள அட்டை திட்டம் சோனியாவின் கனவு திட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்