இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அயோத்தி: பழைய காயங்களை அத்வானி கிளற வேண்டாம் - காங்கிரஸ்!

E-mail அச்செடுக்க
அயோத்தி தொடர்பாக கருத்து தெரிவித்த அத்வானிக்கு கண்டனம்  தெரித்துள்ள காங்கிரஸ் கட்சி, பழைய காயங்களை அத்வானி கிளற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி நில விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பளிக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.


இந்த நிலையில், குஜராத் மாநிலம் சோம்நாத்துக்கு நேற்று சென்ற பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, `கடந்த அறுபது ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே பெரும்பாலான இந்துக்களின் உணர்வு' என்று கூறினார்..

அத்வானியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறியதாவது:-

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிதாமகர்-பீஷ்மராக இருப்பவர், அத்வானி. இருபது ஆண்டுகளுக்கு முன், சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு அவர் ஒரு ரத யாத்திரையை தொடங்கினார். அதனால் மத ரீதியிலான வன்முறை தீ பரவியது. அதன் காயங்கள் வெளிப்படையானவை. அவற்றை இந்த நாடு சமாளிப்பதில் படாதபாடு பட்டது.


சம்பவம் நடந்த பிறகு ஞானத்தை பெறுபவராக இருக்கும் அத்வானியோ அல்லது பா.ஜனதா கட்சியோ இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மைக்கு எந்தவித விளைவுகளையும் ஏற்படுத்த மாட்டார்கள் என நம்புகிறேன்.


குணமடைவதற்கு நீண்டகாலத்தை எடுத்துக் கொண்ட பழைய காயங்களை எந்த வகையிலும் கிளறும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள் என்றும் நம்புகிறோம்.

இவ்வாறு திவாரி தெரிவித்தார்.
கருத்துக்கள் (2)Add Comment
0
...
எழுதியவர்: sathiyaventhan, September 26, 2010
இந்த கிழவனை புடிச்சி உள்ளே போடும்வரை இந்தியாவுக்கு விடிவு காலம் இல்லை.பாகிஸ்தானில் இருந்து ஓடி வந்த இந்த அகதிக்கிழவன் பண்ற லொள்ளு தாங்க முடியலை . அவனது தாய் நாட்டுக்காக நம் நாட்டில் குழப்பம் செய்கிறானோ அத்வானி உருப்படுவியா நீயி
0
...
எழுதியவர்: sankaranarayanan, September 26, 2010
Let Congress also do what they preach regarding the Ayodhya issue It is the Congress which is trying the technique of divide and rule for vote bank

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்