பதாவுன் : தன் திருமணத்தை பற்றி கேட்டாலே அதை தவிர்த்து விடுவார் ராகுல் காந்தி. ஆனால் ராகுலின் ஒன்று விட்ட சகோதரரும் பிஜேபின் இளம் துருக்கியருமான வருண் காந்திக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக வருணின் தாயாரும் பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினருமான மேனகா காந்தி கூறினார்.
இந்திரா காந்தியின் அதிருப்திக்குள்ளான மூத்த மருமகளான மேனகா காந்தி வருணின் திருமணம் பற்றி கூறும் போது மேற்கு வங்காளத்தை சேர்ந்த யாமினி எனும் பெண்ணை வருண் காந்தி திருமணம் செய்ய உள்ளதாகவும் சோனியா, ராகுல் உள்ளிட்ட காந்தி குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்படுவார்கள் என்றார்.
சோனியாவின் மகளும் ராகுலின் சகோதரியுமான பிரியங்காவின் திருமணம் 1997ல் நடைபெற்ற போது இரு குடும்பத்திற்குமான உறவு மோசமான நிலையில் இருந்ததால் மேனகா அத்திருமணத்தை புறக்கணித்த போதும் வருண் அத்திருமணத்துக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. பிலிபிட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வருண் காந்தி பி.ஜே.பியின் தேசிய செயலாளராக கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|





kindly confirm me Whether menaka gandhi is Indiras First son Wife or Seconds's wife .....