ஆப்பிள் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியிட்ட ஐ-பேடு எனப்படும் கைப்பேசி, கணினி இவற்றின் கதம்பமான கலவைக்குப் போட்டியாக பிளாக்பெர்ரி கைப்பேசிகளைத் தயாரிக்கும் கனடாவைச் சேர்ந்த ரிசர்ச்-இன்-மோஷன் நிறுவனம் ப்ளேபுக் என்ற கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்தப் பிளேபுக்கில் கம்பியில்லா நெட்வர்க், ப்ளூடூத் போன்ற இணைப்புகளுக்கான வசதி தரப்பட்டாலும் 3ஜி வசதி தரப்படவில்லை. உலகம் முழுவதும் உள்ள பிளாக்பெர்ரி நெட்வர்க் மூலம் 3ஜி வசதிக்கான குறை நிவர்த்தி செய்யப்படும் என ரிசர்ச்-இன்-மோஷன் தெரிவித்துள்ளது.
வெறும் பொழுதுபோக்கை மட்டும் மையமாகக் கொண்ட ஐ-பேடைப் போல் அல்லாமல் வணிக ரீதியிலும் நல்ல பலன் கொடுக்கும் கருவியாக பிளேபுக் இருக்கும் என ரிசர்ச்-இன் -மோஷன் தெரிவித்துள்ளது.
2011 ஆண்டின் முதல்பாதியில் இக்கருவி விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




