நடிகர் அஜீத் குமார் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக புதிய தகவல் ஒன்று கோடம்பாக்கத்தை உலா வந்து கொண்டிருக்கிறது.கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் மனைவி ஷாலினியுடன் பங்கேற்ற அஜீத், அங்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதனைத்தொடர்ந்து அஜித் அதிமுகவில் சேரப்போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அஜீத்தின் ஆதரவாளர்கள் அச்செய்தியை மறுத்தனர். அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவிடம் அஜீத் ஆசீர்வாதம் பெற்றார் என அவர்கள் கூறினர்.
இந்நிலையில் அஜீத் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக புதிய செய்தியொன்று கிளப்பிவிடப்பட்டுள்ளது. இந்த தகவலின் உண்மை குறித்து இதுவரை தெரியவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீப காலமாக அஜீத்துக்கு அழைப்பு வந்து கொண்டே இருப்பதாகவும் குறிப்பாக ராகுலிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டிருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களை திரட்டுவதில் ஆர்வத்துடன் முக்கிய பங்காற்றி வரும் ராகுல், அஜீத்திடம் போனில் பேசியதாகவும், ராகுல் சார்பில் சில காங்கிரஸ் பிரமுகர்கள் அஜித்தை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் ராகுல் காந்தியை டில்லியில் சென்று சந்தித்துத் திரும்பினார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தன. அண்மையில் நடிகர் எஸ்.வி. சேகர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். இவரும் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்று கூறப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும் நடிகர்களுக்கும் தொடர்புகளை ஏற்படுத்தி கிசுகிசுப்பதின் மர்மம் என்னவோ தெரியவில்லை.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




