இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பாபர் மசூதி தீர்ப்பு - அமைதி காப்போம்!

E-mail அச்செடுக்க

61 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், "பாபர் மசூதியின் கீழ் கோயில் இருந்ததா? மற்றும் பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம்?" ஆகிய இரு விஷயங்களின் மீது நாளை 30.09.2010 மாலை 3.30 மணிக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

 

கடந்த 24.09.2010 அன்று வழங்கப்படுவதாக இருந்த தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தடையுத்தரவு கோரிய வழக்கின் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. அவ்வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.

450 ஆண்டுகால பழமைவாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல கலவரங்கள், ஏராளமான அப்பாவி மனித உயிர்கள் என பல கோர சம்பவங்கள் கடந்த 61 ஆண்டுகளில் நாட்டில் நடைபெற்றுள்ளது.

நாளையத் தீர்ப்பு எந்தத் தரப்புக்குச் சாதகமாக வந்தாலும் நாட்டில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கலாம் என அஞ்சும் அரசுகள், பதட்டம் நிறைந்த பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு, விடுமுறை போன்றவைகளை அறிவித்து பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.

தீர்ப்பு எப்படி அமைந்தாலும் அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். இந்திய நாட்டு அரசியலமைப்புச் சட்டப்படி, உயர் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் இறுதியானவை அல்ல. ஒரு வழக்கில் உயர் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும். ஆகவே, நாளை வழங்கப்படும் தீர்ப்பு எத்தகையதாக இருந்தாலும் இரு தரப்பாரும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்க வேண்டும்.

வன்முறை நெருப்பைத் தூண்டிவிட்டு தங்கள் ஆதாயங்களுக்காக குளிர்காய நினைக்கும் குறுமதியாளர்களின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகி விடக்கூடாது. அயோத்'தீ'யை எரிய விடாமல் அனைவரையும் மதித்து, அரவணைத்து செல்லும் பொறுப்பை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது கடமையென செய்ய வேண்டும். வதந்திகளையோ, வன்முறை செய்திகளையோ பரப்பாமல் இருக்க வேண்டும். பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

பாபர் மசூதி நிலத்தின் மீதான தீர்ப்பின் முக்கியத்துவம் கருதி ஊடகங்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆவேசமான கருத்துக்கள், தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். "பரபரப்புக்காக" இந்தத் தீர்ப்பை யாரும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. நாளை மற்றொரு நாளாக இருக்க வேண்டுமே தவிர, வரலாற்றில் கறைபடியும் வகையில் மற்றொரு கறுப்பு நாளாக மாறி விடாமல் இருக்க இந்திய நாட்டின் இறையாண்மையைப் பேணி பாதுகாக்கும் வகையில் அனைவரும் அமைதி காப்போம்.


கருத்துக்கள் (8)Add Comment
0
...
எழுதியவர்: Indian, September 30, 2010
This is i want..Good
0
...
எழுதியவர்: உணமையான அதிர்ச்சி தகவல்கள் நம் கவனத்திற்க்கு , September 30, 2010
'2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி. இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம்(2010) ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை, இந்த குண்டுவெடிப்பு, இந்திய முஜாஹிதீன்,ஹர்கத்-உல்-ஜிஹாத், பாகிஸ்தான் ஆதரவு, சிமி தீவிரவாதிகளின் செயல் என்று வழக்கை விசாரித்து வந்த காவல்துறையும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்துவந்தன. (Source : Article titled ‘Hindu Terror - Conspiracy of silence’ by Smruti Koppikar, published in ‘The Outlook “, a weekly news magazine, dated July 19, 2010.) , outlookindia தமிழாக்கம்:பிரபாகரன்,கீற்று
0
...
எழுதியவர்: RSS தீவிரவாதிகள் செய்த குண்டு வெடிப்புகள் , September 30, 2010

RSS தீவிரவாதிகள் செய்த குண்டு வெடிப்புகள்
உணமையான அதிர்ச்சி தகவல்கள் நம் கவனத்திற்க்கு
அஜ்மீர் குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்ட தேவேந்திர குப்தா, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோஷி மூலமாக அபிநவ் பாரத் உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்று இராஜஸ்தான் தீவிரவாத ஒழிப்பு படை நம்புகிறது.

2007 செப்டம்பரில் சிமி இயக்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் சுனில் ஜோஷி கொல்லப்பட்டபோது ஆத்திரமடைந்த சாத்வி,அதற்கு பழிவாங்குவதற்காக 2008 மலேகான் குண்டுவெடிப்பை நடத்தியதாக சொல்கிறது மகாராஷ்ட்ரா ATS.

68 பாகிஸ்தானியர்கள் கொலைசெய்யப்பட்ட சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பில் சுனில் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக பெயர் வெளியிடப்படாத சாட்சி ஒருவர் புரோகித்துடன் நடத்திய தொலைபேசி உரையாடலை ஆதாரமாகக் காட்டுகிறது ATS.

இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது.இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ளன.முக்கியமாக தேடப்பட்டுவரும் இராம்நாராயன் கல்சங்கரா, சுவாமி அசீமானந்தா உட்பட இன்னும் சிலர் சிக்கினால், மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரலாம்.
0
...
எழுதியவர்: ஹிந்துவ தீவிரவாதத்தின் முழு உருவமும் , September 30, 2010
அஜ்மீர்,மெக்கா மசூதி,மலேகான்,சம்ஜவுதா எக்ஸ்ப்ரஸ் மற்றும் பல குண்டுவெடிப்புகளும் ஒரு பெரிய சதிதிட்டத்தின் சிறு சிறு பகுதிகளே. இந்த சம்பவங்களையெல்லாம் ஒன்று சேர்த்து இதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலை சிபிஐ வெளிகொண்டுவந்தால் மட்டுமே, ஹிந்துவ தீவிரவாதத்தின் முழு உருவமும் நமக்குத் தெரியவரும். (Source : Article titled ‘Hindu Terror - Conspiracy of silence’ by Smruti Koppikar, published in ‘The Outlook “, a weekly news magazine, dated July 19, 2010.) , outlookindia தமிழாக்கம்:பிரபாகரன்,கீற்று
0
...
எழுதியவர்: rajagopalan, October 01, 2010
you first write about muslim terrorism and mao terrorism,
IM,. HUM and al qaida are all extremist and to be shot point blank. Are you not seeing the same from kashmir. Muslim terrorist sent back all indain from kashmir read pandits and now asking for seperate nation for them. do you think pakistan will allow you to settle as a seperate nation. the aim of muslim fundamentalists is to use female as child making machines and no respect for them. Increase their population in every country and then claim for seperate nation. Its time every one wake up and make these terrorist nature and read their minds.
0
...
எழுதியவர்: Alain, October 02, 2010
for Rajagopalan: you don't have knowledge about islam and you too don't have knowledge what there happen in kashmir. Listen, a single military mas is there for 20 people. Can u ear about this news type of news before in anywhere?. I can give more reference to you about terrorism in islamic monopology, but not here. you give your mail id, we can meet by mail.. my e-mail id is, எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் '> எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்
0
...
எழுதியவர்: Rafi, October 03, 2010
Muslims never voilate ever but one think we should understand if some one enter in your and occupy for a years and after certin times the judgment says this is going to divide as 3parts one for the owner and one for the occupiyer and one goes to some organisation will you people will accept? is this is the justise?I never expect this justise from country.O My musime Brothers you never get justise from this system.Pls try to understand only KHILFHA(Islamic state) can give the justise for all.Even they are muslimes or non Muslimes understand this and work for that Insha allha.
0
...
எழுதியவர்: Muhammad, May 02, 2011
INTHA UZHAHATHIL NADAKKUM ANAITHU THEEVARAVATHA SEYALKALUKKUM KARANAM, ISLAMIYALARHALAI THEEVARAVATHIHAL YENDRU SITHTHARIPATHARKAHA NADAIPERUM MIGA KEVALAMANA NADAGAM. BUT, NANGAL UNGALAI APPADI NINAIKKAVILLAI YENGALUDAYA SAHOTHARARHALATHAN NINAIKKIROM.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்