இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பிகாரில் தேர்தல் பிரசாரம் செய்ய மோடிக்கு தடை

E-mail அச்செடுக்க

புது டில்லி: எதிர்வரும் பிகார் சட்டமன்ற தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரசாரம் செய்ய பாஜக தடை விதித்துள்ளது. இன்று தேர்தல் ஆனனயத்திற்கு அளிக்கப்பட்ட பாஜகவின் தேர்தல் பிரச்சாரகர்கள் பட்டியலில் மோடி பெயர் குறிப்பிடப்படவில்லை.

தற்போது பாஜக ஆதரவோடு ஆட்சி செய்து வரும் ஐக்கிய ஜனதா தளம், மோடி பிகாரில் சுற்றுபயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்தால், தனது சிறுபான்மையினரின்  வாக்குகள் பாதிக்கப்படும் என தொடர்ந்து அச்சம் தெரிவித்து வந்தது. குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மோடியின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருப்பதால் அவர் மீது முஸ்லிகள் கோபத்தில் இருப்பதாக ஐக்கிய ஜனதா தளம் கருதுகிறது.

தேர்தல் பிரசாரகர்கள் பட்டியலில் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, நிதின் கட்காரி, சுஸ்மா சுவராஜ், அருன் ஜேட்லி, முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் உட்பட சுமார் 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதனை ஆரம்பத்தில் எதிர்த்து வந்த பாஜக, தற்போது தனது கூட்டனி கட்சியின் விருப்பத்திற்கு இசைவு தெரிவித்துள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்