இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சாதாரண கைதியாக வெலிக்கடை சிறையில் சரத் பொன்சோகா

E-mail அச்செடுக்க

இராணுவ நீதிமன்றத்தினால் முப்பது மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் தனது வழமையான உடைகளுக்கு விடைகொடுத்துள்ளதோடு, சிறைக்கைதிகள் அணியும்  உடைகளை அணிந்து வழமையான கைதிகளைப் போலவே நடாத்தப்படுவதாக அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு சிறையில் ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படுவது போன்று காலையில் சோறும், தேங்காய் சம்பளும் வழங்கப்படுவதாகவும், அவருக்கு அங்கு ஒரு பாயும், தலையணையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். அத்துடன் தனக்கு விஷேட காரணங்களைத் தவிற மாதம் ஒரு முறையே தனது கணவரை சிறையில் சென்று சந்திக்க முடியும் என்று தெரிவித்தார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் வழமைபோல் சென்று அவரைப் பார்த்து வருகின்றனர்.

தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டால் தண்டணையை மறுபரிசீலனை செய்ய யாப்பில் இடமுண்டு என ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் தனது கணவர் மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு தவறு எதுவும் செய்யவில்லை எனவும் அவர் கூறினார்.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: யாழ், October 02, 2010
தமிழர் அழுத கண்ணீர் வீண் போகாது. ஒரு கொலை வெறியன் தண்டனை அனுபவிக்கத் தொடங்கிவிட்டான். இனி மற்ற கொலை வெறியருக்கும் இது தொடரவேண்டும். ஒரு கவலை ஒன்றாக இருந்து இனவழிப்பு பாடுபாதகச் செயலை செய்த குற்வாளிகளே இன்னும் ஒரு குற்றவளிக்குத் தண்டனை அழிப்பதே.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்