இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஆர்.எஸ்.எஸ்ஸாக மாறிய நீதிமன்றம் : அயோத்தி தீர்ப்பு குறித்து திருமாவளவன் சீற்றம்

E-mail அச்செடுக்க

சென்னை: அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கில் 3 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் “ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் “என்று கூறினார்.



 

மேலும் அவ்வறிக்கையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வரலாற்றை பார்க்காமல் வெறும் நம்பிக்கைகளை வைத்ஹு வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது என்று கூறினார்.

ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டிக்கதக்கது என்று கூறிய திருமாவளவன் 450 ஆண்டுகள் மசூதி இருந்ததும், அது இடிக்கப்பட்டதும் நிகழ்கால வரலாறுகள் என்றும் எவ்வித வரலாற்று ஆதாரம் இல்லாத ராமர் பிறப்பை வைத்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாக கூறியுள்ள திருமாவளவன் மசூதி இடித்தவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதையும் சுட்டி காட்டியுள்ளார்.

முஸ்லீம்களுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய  நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது அனைவரின் கடமை என்றும் பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை  போராட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்துக்கள் (8)Add Comment
0
...
எழுதியவர்: milhar, October 03, 2010
kaatumiraadithanamaana theerpukku sariyaana vilakkam.thirmavitku nanri
0
...
எழுதியவர்: younus, October 03, 2010
ITHU UNMAYIL VARALATRAYE MANASATCHI ILLAMAL MAATRI VITTARHAL. NICHAYAM IRAIVAN IVARHALUKKU PAADAM KARPIKKAMAL VIDA MAATAN.ITHU PONDRU VAKKEELHAL INDHA NAATIRKEY LAAYAK ATRAVARHAL.MUDALIL VARALATRAI PADITHU PIRAHU AVARHAL VAKEEL AHA VANDIRUKKA VENDUM.
0
...
எழுதியவர்: Real_Indian, October 03, 2010
Theerpu kooriya Ivargal neethibathigal illai KAAVI bathigal!!pallivasal idikapatta thai govermentum,ulagamum parthathu..aanal theerpu Advanism thukku saathagamaga(2/3) vanthu lathu..Ini sattathin mel yaarukka vathu nambigai varuma??
0
...
எழுதியவர்: KAL, October 03, 2010
இந்த நீதிபதிகள் ஓய்வு பெற்றால் இவர்களுக்கு BJP மற்றும் RSS ல் நல்ல உயர் பதவி கிடைக்கும். திருமாவளவனின் கூற்று ஒட்டு மொத்த நடுநிலையாளர்களின் கருத்து. இன்னும் இவர்கள் இது போன்று கேடு கெட்ட தீர்ப்புகள் சொல்லி எத்தனை குடிகளை கெடுத்தார்களோ? தெரியவில்லை.
0
...
எழுதியவர்: NANBAN, October 03, 2010
450 ஆண்டுகள் மசூதி இருந்ததும், அது இடிக்கப்பட்டதும் நிகழ்கால வரலாறுகள் என்றும் எவ்வித வரலாற்று ஆதாரம் இல்லாத ராமர் பிறப்பை வைத்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது
0
...
எழுதியவர்: KALA, October 03, 2010
முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஆனதினால் தான் இன்றைக்கு இந்த தீர்ப்பின் போது
கலவரம் ஏதும் நடக்கவில்லை. முஸ்லிம்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள்.
இன்னமும் உச்ச நீதி மன்றத்தை நம்புகிறார்கள்.இதே எதிர் தரப்பினற்க்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால்
இந்தியாவை ஒரு கலவரக் காடாக்கி பிணம் தின்றிருப்பார்கள் இந்த காவிக் கயவர்கள். இந்த
தீர்ப்பை எழுதுவதற்குள் என்னவெல்லாம் இன்னல்களை சந்தித்தார்களாம் இந்த (அ)நீதிவான் கள்!
பேட்டி வேறு வெட்கமில்லாமல் கொடுக்கிறார்கள்!இந்த தீர்ப்பை நம்ம ஊர் கட்ட பஞ்சாயத்து
ரவுடிகளிடம் கொடுத்தால் அரை மணி நேரத்தில் இதை விட செறந்த தீர்ப்பை சொல்வார்கள்!
அருகில் இருந்தால் காரி துப்பலாம் முகத்திலே!

இந்த நீதிபதிகள் ஓய்வு பெற்றால் இவர்களுக்கு BJP மற்றும் RSS ல் நல்ல உயர் பதவி கிடைக்கும்.
திருமாவளவனின் கூற்று ஒட்டு மொத்த நடுநிலையாளர்களின் கருத்து. இன்னும் இவர்கள் இது போன்று
கேடு கெட்ட தீர்ப்புகள் சொல்லி எத்தனை குடிகளை கெடுத்தார்களோ? தெரியவில்லை.
0
...
எழுதியவர்: butsighan, October 04, 2010
jahillayavin idam theerpu keetal ippadithan irukum . irivanin sattam intha boomyil nilai nirthiunal mattum anaithu ullanghlayum vella mudiyum, ithan pinbum supreme court mal nanbikkai irukkirathu endru nambuvathu muttal kalin ennam . oru islamiyana intha boomeyil antha makkalidam islalamai dawa sayya vendum rasool (SAW) evvaru saitharghola,sahabi kal evvaru saitharghola appadi sayya vendum.appolathu than ivarghal unarvarghal,intha makkali vaithu masjid e katta vendum athu varikum babri nammal ondrum sayya mudiyathu allah nadinal thavira.EG: UK VIL 1000 MASJID ULLATHU PERMPALUM CHURCH KAL THAN ATHI MASJID KA AVARGHALA MASJID AGHA MATTRINARGHAL EPPADI??
EG: GERMANY INNUM SILA YEAR GHALIL ISLAMIYA COUNTRY MARA POGHUTHU (PRESIDENT SPPECH)
0
...
எழுதியவர்: Saravanan , October 11, 2010
கடவுள் நம்பிக்கையில்லாதவர் என்று தன்னைக் கூறிக்கொள்பவர்கள் எந்த மத விஷயத்திலும் தலையிடாமல் இருப்பதே நல்லது.. கடவுள் நம்பிக்கை இல்லாத இவர்களுக்கு, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டினால் இவர்களுக்கு என்ன?.. அல்லது பாபர் மசூதி கட்டினால் இவர்களுக்கு என்ன?..

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்