பாஜகவின் இணைய தளத்தின் பெயரை பயன்படுத்தி அதை காண வருபவர்களை காங்கிரஸ் கட்சி தன் இணைய தள முகவரிக்கு திருப்பி விடுவதாக காங்கிரஸ் கட்சியின் மீது குற்றம் சுமத்தியுள்ளது பாஜக.
இது குறித்து தெரிவித்த பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் '' இணைய வழி திருட்டு குற்றத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளுக்கான இணைய தள முகவரிகள் டாட் காமில் என்று முடியாமல் டாட் ஆர்ஜ் ( org ) என்று பதிவு செய்யப் பட்டு இருக்கும். அது போன்றே பாஜகவும் www.bjp.org என்ற இணைய தள முகவரியில் இயங்கி வருகிறது. வெளிநாட்டை சேர்ந்த பாரத் ஜனதா பிரகாசன் என்பவரின் பெயரில் பதிவு செய்யப் பட்டுள்ள www.bjp.com என்ற இணைய தள முகவரியை கிளிக்கினால் அது காங்கிரஸ் கட்சியின் இணைய தள முகவரிக்கு திருப்பி விடுவதாகவும் புகார் தெரிவித்துள்ளது பாஜக.
எனினும் இது போன்ற வக்கீல் நோட்டீஸ் குறித்து எதுவும் தெரியாது என்றும் காங்கிரஸ் கட்சி இது போன்ற செயல்களில் ஈடுபடாது என்றும் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சுக்லா.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




