கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, இம்மாதம் 12ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில ஆளுநர் கெடு விதித்துள்ளார்.தமது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த 4 அமைச்சர்களை எடியூரப்பா இன்று நீக்கினார். இதனையடுத்து நீக்கப்பட்ட 4 அமைச்சர்களில் ஒருவரான நரேந்திர சாமி, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆளுநர் பரத்வாஜை சந்தித்து, எடியூரப்பா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 21 எம்.ஏல்.ஏ.க்கள் விலக்கிக் கொள்வதாக தெரிவித்தார்.
இந்நிலையில், வருகிற 12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஆளுநர் பரத்வாஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பான நிலை காணப்படுகிறது.
பாரதீய ஜனதா கட்சி சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கும் என்று கூறிய முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் கட்சி பாஜக ஆட்சியைக் கலைப்பதற்காகவே மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கள்ள உறவு கொண்டுள்ளதாகக் கூறினார். கர்நாடக வரலாற்றிலேயே முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ரூ. 20 கோடி முதல் 30 கோடி வரை வழங்கத் தயாராக இருப்பதாக பேரம் பேசப்படுவதாகவும் அவர் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




