புறம் பேசுவது, வயதிற்கு தகுந்த மரியாதையின்றி கிண்டல், கேலி செய்வது, அடுத்தவர்களை கேவலபடுத்துவது இதுபோன்ற செயல்கள் ஃபேஸ் புக்(Facebook), ட்விட்டர்(Twitter) போன்ற சமுக வலைதளங்களை பயன்படுத்துவதால் சிறுவர்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஐக்கிய இராஜ்ஜியத்தில் மிக பிரபல பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் நியூட்டன் (John Newton) பிரபல பத்திரிக்கையான 'தி டெலிகிராப்'பிற்கு (The Telegraph) அளித்துள்ள பேட்டியில் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் தகுந்த பாதுகாப்பான துணையுடன் அரட்டை(chat), மற்றும் கல்வி சம்பந்தமான வலைத்தளங்களை பார்ப்பதால் அவர்களது கல்வி அறிவு வளர்கிறது. ஆனால் ஃபேஸ் புக் (Facebook), ட்விட்டர் (Twitter) போன்ற சமுக வலைதளங்கள் உண்மைக்கும், புறம் பேசுவதற்கும் உள்ள வித்தியாசம் பிரித்து அறியாமல் இருக்கும் அவர்களை மங்கிய வெளிச்சத்தில் கற்பிக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளார். அதாவது தெளிவான கல்வி அவர்களுக்கு தராமல் குழப்பமான வழியில் தவறான கல்வி பெறுகிறார்கள் என்பதையே அவர் அவ்வாறு கூறியுள்ளார். இதற்கு 'தி டெலிகிராப்' பத்திரிகை “A little knowledge is dangerous thing” (அரைகுறை ஞானம் ஆபத்தை விளைவிக்கும்) என்று வர்ணித்து எழுதியுள்ளது.
மேலும் " நாம் தற்போது பின் வரும் சந்ததியினருக்கு சிந்தித்து பெரும் கல்வியை ஊக்கப்படுத்தாமல் திரையில் கண்களால் காண்பதை ஆதாரமாக கொண்டு கற்பிப்பதை ஊக்கப்படுத்திவருகிறோம். இது அவர்களது பகுத்தறியும் திறனை பாதிக்கும்" என்று கூறியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




