இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பயிரை மேயும் வேலிகள்!

E-mail அச்செடுக்க

பொதுமக்களைக் காக்க வேண்டியவர்கள், பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டியவர்கள், அதற்காகவே பணியமர்த்தப்பட்டவர்கள் - அரசு ஊழியர்கள் தாம் -, பொதுமக்களுக்கு தரும் இன்னல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனைச் சமீபத்தில் நடந்த கீழ்கண்ட சம்பவங்கள் உணர்த்துகின்றன.

சம்பவம் 1:

திருச்சி சிறுகாவனூர் எனும் ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி செய்து வருபவர் சரவணன். இவர் பெண் ஒருவரை மிரட்டுவதற்காக தனது துப்பாக்கியால் சுட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சரவணன் மீது துப்பாக்கியைத் தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பிரிவு 308ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் 2:

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை 9வது பட்டாலியனில் பணியாற்றி வந்தவர் பெண் காவலர் உமாமகேஸ்வரி. இவருக்கும் ஆயு‌தப்படை காவலராகப் பணியாற்றும் இசக்கியப்பன்னுக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உமாமகேஸ்வரியைக் கொலை செய்துவிட்டு நாகர்கோவில் சென்று தற்கொலை செய்து கொண்டார் இசக்கியப்பன். மருத்துவப்பரிசோதனையில் உமாமகேஸ்வரி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் 3:

நவி மும்பை பகுதியில் இருக்கும் லோட்டஸ் மருத்துவமனையில் அக்டோபர் 17, ஞாயிறன்று அதிகாலையில் இளம் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவரை விஷால் பெனே என்ற மருத்துவர் கற்பழித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் காவல்துறையில் பதிவு செய்தப் புகாரின் அடிப்படையில் மருத்துவர் விஷால் பெனே கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட இருக்கின்றார்.

வேலியே பயிரை மேய்கிறது!!!

- சுல்தான், குவைத்.

கருத்துக்கள் (3)Add Comment
0
...
எழுதியவர்: Indian, October 18, 2010
இந்த வாசகர் கருத்தின் மோசமான வாசகம் நீக்கப்பட்டது - ஆசிரியர், இந்நேரம்.காம்
0
...
எழுதியவர்: jagan, October 19, 2010
idarkellaam kaaranam tv megaa serialm cinemaavumdhaanb
0
...
எழுதியவர்: N.A.M. SADIQ, December 30, 2010

ஸ்வுதி அரேபியா அல் கஸீம் பகுதியில் புதிதாய் தாயகத்திலிருந்து வந்த நம் தமிழகத்து புதுகை மாவட்டத்தை சேர்ந்த அன்பர் ஒருவர் தனது கஃபிலாலேயே எரிக்கப்பட்டுள்ளார். எரிந்த நிலையில் மருத்துவமனையில் சேர்த்தும் பலனில்லாமல் இறந்து விட்டார். அவருக்கு 2 ஆண் 2 பெண் என 4 குழந்தைகள் உள்ளனர். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள அவரது குடும்பத்திற்க்கு நமது உதவி கண்டிப்பாக தேவை. மிக முக்கியமாக தற்போது சட்ட உதவி தேவை. அன்பர்கள் அவரின் மாமனார் ஜனாப் நத்தர் அவர்க்ளை தொடர்பு கொள்ளுமறு வேண்டுகிரேன். அவரது மொபைல் நம்பர் : 0569076938 புகைரியா அல் கசீம் குறிப்பு: எனது அலுவலக வேலை மிகுதியால் முழு விவரங்களை சேகரிக்க முடியவில்லை விரிவாக அடுத்த மெயிலில் தெரிய படுத்துகிரேன். அன்புடன் முஹம்மது ஸாதிக்.புகைரியா0502172921

சகோதரர்களே! தகவல் அறிந்து மனம் மிகவும்வேதனை அளிக்கிறது...
உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டவரின் மாமனார் நத்தர் முஹம்மதுவிடம் தொலைபேசியில் தொடர்பு கோண்டு பேசினேன் அதன் பின் புரைதா கிளை தமுமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி உள்ளேன். இது சம்பந்தமாக நாளை இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு பேச உள்ளேன்.

அவரிடம் பேசியதிலிருந்து...... கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ளார்.... சம்பந்தப்பட்ட (கபில்) சவுதி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
இன்ஷா அல்லாஹ் துரித நடவடிக்கைக்கும் நியாயம் கிடைப்பதற்கும் அல்லாஹ் துணைசெய்வானாக...


அன்புச் சகோதரர்களுக்கு! நடந்துள்ள நிகழ்வு மிகவும் ‍வேதனைக்குரியது பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லாஹ் பொருமையையும் அருளையும் பொழிவானாக....

இந்த நிகழ்வு சம்பந்தமாக நேற்றுத்தான் மின் அஞ்சல் மூலம் தகவல் அறியப் பெற்றோம். அதன் பின் சம்பந்தப்பட் அனைத்து துறைகளுக்கும் தொடர்பு கொண்டு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தூதரகமும் தன் கடமையைச் செய்து வருவதாக தூதரக அதிகாரிகளை தொடர்புகொண்டதன் மூலம் அறிந்தோம். மேலும் தூதரகத்தின் மூலம் வேண்டிய துரித நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எரிக்கப்பட்டவரின் பெயர் ஷாகுல் ஹமீது புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம்கைகாட்டி. அவரின் உறவினர்களான நத்தர் முஹம்மது, ஷாகுல் ஹமீது ஆகியோரிடம் பேசி விபரங்கள் சேகரிக்கப்ட்டுள்ளன தாயகத்தில் அவரது உறவினர் அப்துல் மஜித் அவர்களை தொடர்பு கொண்டு மேலும் சட்டரீதியாக செய்ய வேண்டிய அனைத்து தகவல்களும் சொல்லப்பட்டுள்ளன.

தமுமுக மாநிலத்தலைமையகத்தை (தலைவரை) தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக அனைத்து வேலைகளுக்கும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புதுக்கோட்டை தமுமுக மாவட்டத்தலைவர் துரை முஹம்மது அவர்களை தொடர்பு கொண்டு சட்ட ரீதியாக நடக்க வேண்டிய அனைத்து வேலைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இன்ஷா அல்லாஹ் மத்திய மண்டல தமுமுக அனைத்து விதமான உதவிகளுக்கும் ஏற்பாடுகள் செய்து வருகின்றது

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்