எர்ணாகுளம் : பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன் இன்று தன் கணவருடன் இணைந்து கூட்டாக விவகாரத்து கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இரு குடும்பங்களும் நீதிமன்றத்துக்கு வெளியே தங்களுக்குள் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இம்முடிவுக்கு வந்துள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் குவைத்தில் பணிபுரியும் கேரளாவை சார்ந்த மென்பொருள் பொறியாளர் நிஸ்சல் சந்திரன் என்பவரை திருமணம் செய்த காவ்யா மாதவன் சில மாதங்களிலேயே திருமணம் தோல்வியடைந்து விட்டது என்று தெரிவித்தார். குவைத்திலிருந்து கேரளாவிற்கு திரும்பிய காவ்யா எர்ணாகுளம் குடும்ப நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி ஒரு மனுவும் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாக தன் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்தார்.
இடையில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையில் காவ்யா தன் கணவர் மீது காவல்நிலையத்தில் கொடுத்த வழக்கை வாபஸ் வாங்கி கொண்டார். இன்று நீதிமன்றத்திற்கு தனித்தனியாக வந்த இருவரும் இருவரும் விவகாரத்துக்கு சம்மதிப்பதாக தெரிவித்தனர். குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவுக்கு அறிமுகமான காவ்யா திருமணத்திற்கு பிறகு நடிப்பதை கைவிட்டவர் மீண்டும் தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




