இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தேனியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடப்பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்!

E-mail அச்செடுக்க
தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள இந்திய நியூட்ரினோ அறிவியற் கூடத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துவிட்டதைத் தொடர்ந்து, இந்த ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகள் 2011ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2012ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படும்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிப்புரம் என்னும் ஊரின் மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே மலை உச்சியில் இருந்து 1.3 கி.மீ. ஆழத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும். அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ காணும் கருவி (டிடெக்டர்) அமைக்கப்படும். இந்த அறிவியல் கூடத்தை டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமையில் சுமார் 20 கல்விக் கூடங்கள் இணைந்து அமைக்க உள்ளன.

167 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இத்திட்டத்திற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம் அக்டோபர் 18ஆம் தேதி ஒப்புதல் தெரிவித்தது. இனி, அணு சக்திக் கழகத்தின் ஒப்புதலைப் பெற்று, அமைச்சரவையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று இத்திட்டத்தின் தலைவர் பேராசிரியர் நபா மோன்டல் கூறியுள்ளார்.

அண்டம் முழுவதும் பரவிக் கிடக்கும் நியூட்ரினோத் துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ அறிவியல் கூடத்தின் திட்டமாகும்.

"இந்த ஆய்வு மையம் அமைந்தால், எங்கள் ஊர்களை காலி செய்து விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும். இந்த மையத்தை எங்கள் பகுதியில் அமைக்க கூடாது" என்று தேசி மாவட்ட மக்கள் இந்தத் திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்