இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாடுபட்டதற்காக `இந்திரா காந்தி தேசிய விருது' வழங்கப்பட்டது. இதை பிரதமர் மன்மோகன்சிங் வழங்கினார்.தேசிய ஒருமைப்பாட்டுக்காக சிறந்த சேவை செய்கிறவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பெயரில் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமும், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு விருது வழங்கும் விழா, இந்திரா காந்தியின் 25-வது நினைவு நாளான ஞாயிற்றுக் கிழமையன்று டில்லியில் உள்ள தீன் மூர்த்தி பவனில் நடந்தது.
ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்துக்கு, தேசிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி விருது வழங்கினார். ஆசிரம தலைவர் சுவாமி வியாப்தானந்தா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிரதமர் மன்மோகன்சிங் விருது வழங்கினார்.
விருது வழங்குவதற்கு முன்னதாக சோனியாகாந்தியும், மன்மோகன்சிங்கும் இருவரையும் வாழ்த்திப் பேசினார்கள்.
சுவாமி வியாப்தானந்தாவும் ஏ.ஆர்.ரகுமானும் ஏற்புரை நிகழ்த்துகையில், மறைந்த இந்திரா காந்திக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.
விழாவில் மத்திய மந்திரிகளும், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




