சமாஜ்வாதி ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அமர்சிங் "பாம்பே மிட்டாய்" என்ற மலையாளத் திரைப்படத்தில் மலையாளியாகவே நடிக்கிறார். இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவின் கணவராக அவர் தோன்றுகிறார்.சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் ராஜ்யசபா உறுப்பினராகத் தொடரும் அமர் சிங் இந்தப் படத்தில் இசைமையப்பாளர் வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடத்திற்காகத் தாம் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் பிரிவியூவ் காட்சிக்குக்குப் பின் அமர் சிங்கும் நடிகை ஜெயபிரதாவும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். நடிப்புத் துறையில் அமர்சிங்குக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக ஜெயபிரதா கூறினார்.
உம்மர் கரிக்காட் என்ற அறிமுக இயக்குநரின் "பாம்பே மிட்டாய்" இந்த நாட்டின் வேலையில்லா இளைஞர்களுக்கு நல்ல செய்தியைச் சொல்கிறது என்றும் ஜெயபிரதா கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




